சுவிஸில் தளர்த்தப்படவுள்ள கோவிட் கட்டுப்பாடுகள் - திகதிவாரியாக அறிவிப்பு

date-announcement
By Independent Writer Feb 26, 2021 06:07 PM GMT
Report

சுவிட்சர்லாந்தில் கடந்த 18. 01. 2021 முதல் நடைமுறைக்குப்படுத்தப்பட்ட கோவிட் இறுக்க நடவடிக்கைகள் சிலவற்றை தளர்த்தும் அறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே சுவிட்சர்லாந்து அரசு அறிவித்திருந்தது.

அதற்கமைய 24. 02. 2021 புதன்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுவிட்சர்லாந்து நாட்டின் அதிபர் திரு. குய் மார்மெலின் மற்றும் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே ஆகியோர் பங்கெடுத்து 01. 03. 2021 முதல் நடைமுறைக்கு வரும் தளர்வுகளை அறிவித்தனர்.

* அனைத்துக் கடைகளும் திறக்கப்படும். * திறந்தவெளியில் பொழுதுபோக்கு நிலையங்கள் திறக்கப்படலாம்.

* அருங்காட்சியகங்கள், வாசிப்புமண்டபம், ஆவணக்காப்பகம் திறக்கலாம்.

* திறந்தவெளியில் ஆகக்கூடியது 15 நபர்கள் ஒன்றுகூடலாம்.

* 20 வயதிற்கு உட்பட்டோர் விளையாட்டு மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கெடுக்கலாம். (2001ம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னர் பிறந்தோர்)

* வீடுகளில் தனியார் ஒன்றுகூடலில் ஆகக்கூடியது ஐவர் மட்டுமே பங்கெடுக்கலாம்.

* விழாக்கள் கொண்டாடத் தடை தொடர்கின்றது.

* உணவகங்கள் தொடர்ந்தும் பூட்டப்பட்டிருக்கும்.

* உயர் கல்வி தொடர்ந்தும் இணையவழியில் நடைபெறும்.

* குடும்ப வட்டத்தில் 20 வயதிற்கு உட்பட்டோர் மட்டுமே பாடலாம்.

* முகவுறை தொடர்ந்தும் கட்டடத்திற்குள் வெளியிலும் அணிந்திருக்க வேண்டும்.

* வாய்ப்புள்ளோர் தொடர்ந்தும் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டப்படுகின்றனர்.

கடந்த நாட்களில் சுவிசில் கோவிட் தொற்றின் தொகையினைப் பார்த்தால், பெருந்தொற்று கட்டுக்குள் இல்லை என்ற தோற்றத்தை அளிக்கலாம். ஆனால் அதன் காரணம் உருமாறித் திரிவடைந்த நுண்ணிகள் ஆகும். தொற்றுத் தொகை அதிகமாக இருந்தபோதும், மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்வோர் தொகை குறைவாகவே உள்ளது. சுவிற்சர்லாந்தின் அண்டைய நாடுகளிலும் இதுவே நிலையாக உள்ளது. ஆகவே நாம் படிப்படியாக தளர்வுகளை அறிவிப்போம். மார்ச் நடுப்பகுதியில் அடுத்த முடிவு அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சர் திரு. பெர்சே தெரிவித்துள்ளார்.

01. 03. 21 முதல் கடைகள் திறப்பு

எதிர்வரும் கிழமை முதல் அனைத்துக் கடைகளும் திறக்கப்படும். அதுபோல் அருங்காட்சியகங்கள், வாசிப்புமண்டபங்கள், ஆவணக் காப்பகங்கள், நூலகங்கள் மூடப்பட்ட கதவினைத் திறந்துகொள்ளலாம். அதுபோல் கட்டடத்திற்குள் அல்லாது திறந்தவெளியில் நடைபெறும் ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு செயற்பாடுகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக விலங்குக் காட்சியகங்கள், தாவரவியல்பூங்கா, நேருணர்வுப்பொழுதுபோக்குப் பூங்கா என்பன திறக்கப்படலாம்.

இளவயதினருக்கு விடுதலை

முதலில் 16 வயதிற்கு உட்பட் இளையோர்களுக்கு உதைபந்தாட்டப் பயிற்சி, பாடல் ஒத்திகை ஆகியவற்றில் பங்கெடுக்க ஒப்புதலை அளித்திருந்த சுவிஸ் அரசு, தற்போது அதன் வயதெல்லையை இருபதாக உயர்த்தி இளையவர்களுக்கு 01. 03. 21 முதல் சிறு விடுதலையை அளித்துள்ளது.

ஆனாலும் ஒரு குடும்பத்தில் விருந்தினராக ஆகக்கூடியது ஐவர் எனும் விதி தொடர்கிறது. நான்கு சுவற்றுக்குள் குறுகிக்கொள்ளும் காலம் ஆகக்குறைந்தது மார்ச் 2021 வரை தொடரவுள்ளது.

தனிப்பட்ட நிகழ்வுகள் ஆகக்கூடியது 15 நபர்கள் பங்கெடுக்கும் வகையில் நடைபெற நடுவனரசு ஒப்புதல் அளித்துள்ளது. செயற்கை உறைபனிச் சறுக்கும் விளையாட்டு, வரிப்பந்து விளையாட்டு (ரெனிஸ்) மற்றும் உதைபந்தாட்டத் திடல்கள் மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டு அரங்குகள் மீண்டும் திறக்கப்படலாம்.

விருந்தோம்பல்துறை

மேழத்திங்கள் (சித்திரை) முதல் உணவங்கங்கள் மீண்டும் திறக்க ஒப்புதல் அளிக்கப்படலாம். பல மாநிலங்களும் 22.03.21 உணவங்கள் திறக்க வேண்டுகை வைத்துள்ளன. உணவங்களை திறந்துகொள்ளலாம் என அறிவிப்பது இப்போது பொருத்தம் அல்ல என சுவிஸ் அரசு கருதுகின்றது. அதிக மக்கள் குறுகிய இடங்களில் ஒன்றுகூடுவதைத் தடுப்பது பெருந்தொற்றுத் தவிர்ப்பில் மிகவும் தேவை என சுவிஸ் அரசு கருதுவதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே, தொற்றுக் கட்டுக்குள் இருப்பின் 22. 03. 21 முதல் உணவகங்கள் திறக்க வாய்ப்பு உள்ளதாக ஊகம் தெரிவித்தார்.

எடுத்துச் செல்லும் உணவங்கள், பாடசாலை உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் அதுபோல் தங்குவிடுதியின் விருந்தினர் உணவகம் என்பன தற்போது உள்ளதுபோல் தொடர்ந்தும் திறந்திருக்கலாம். பொதுவான உணவகங்களின் வெளிப்பகுதி, அடுக்குத்தளம் என்பன பெரும்பாலும் சித்திரை மாதம் முதற்கிழமை முதல் திறக்கப்படலாம்.

சுவிசின் நடுவனரசுடன் பேச்சுவார்தையில் கடந்த கிழமை ஈடுபட்டிருந்த பல மாநிலங்களும் சுவிஸ் அரசின் எண்ணத்திலிருந்து மாறுபட்டு, விருந்தோம்பல் துறைக்கு முற்கூட்டிய தளர்வுகளை வேண்டுகின்றன.

பல மாநிலங்களும் உணவகங்கள் மார்ச் மாதம் முதல் திறந்த வெளியில் இயங்குவதற்கு சுவிசரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என தம் விருப்பத்தை தெரிவித்துள்ளன.

கடந்த ஞாயிறு இக்கோரிக்கையினை கிறவ்புந்தென், ரிச்சீனோ, ஊறி, பிறைபூர்க், தூர்க்காவ் ஆகிய மாநிலங்கள் வலியுறுத்தி இருந்தன. அறோ மாநிலம் மட்டும் நடுவனரசின் முன்மொழிவை முழுமையாக வழிமொழிந்த மாநிலமாக உணவங்கள் ஏப்பிரல் திறந்தால் நன்று என நடுவனரசின் முடிவை ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அப்பென்செல் இன்னெர்கோடென், கிளாறுஸ், ஆகிய மாநிலங்கள் மார்ச் முதல் திறந்த வெளியிடங்களில் உணவகங்கள் பணிசெய்ய ஒப்புதல் கேட்டு சுவிற்சர்லாந்து நடுவனரசிடம் விண்ணப்பித்துள்ளன. வோ மாநிலம் 15. 03. 21 முதல் உணவங்கள் பகல் பொழுதுகளில் திறந்திருக்க நடுவனரிசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுபோல் கடந்த சனிக்கிழமை செங்காளன், அப்பென்செல் அவுசெர்கோடென் ஆகிய மாநிலங்கள் 01. 03. 21 முதல் உணவங்கள் திறப்பதற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுவிஸ் விருந்தோம்பல்துறையின் சம்மேளனம் மற்றும் சுவிசின் வலது சாரிக் கட்சியான எஸ்.வி.பி ஆகியன 01. 03. 21 உணவகங்கள் திறக்க உரிய நடவடிக்கையினை சுவிஸ் அரசு மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளன.

லுட்சேர்ன், சுவிஸ், நிட்வல்டென் ஆகிய மாநிலங்கள் தற்போது நடுவனரசு அறிவத்ததைப் பார்கவும் விரைந்து உணவங்கள் திறக்க ஒப்புதல் அளிக்க தளர்வினை சுவிஸ் அரசு அறிவிக்க வேண்டி உள்ளன.

சுவிஸ் மற்றும் நிட்வல்டென் மாநிலங்கள் உரிய காப்பமைவுடன் உணவங்கள் முழுவீச்சாக தொழிற்படலாம் எனக் கருத்தினை தெரிவித்துள்ளன.

பாராளுமன்ற ஆணைக்குழுவின் ஊக்கம்

22. 03. 21 உணவங்கள் மீளத்திறக்கவும், அதுபோல் பண்பாட்டு, பொழுதுபொக்கு, ஓய்வு மற்றும் விளையாட்டு துறைகள் விரைந்து திறக்கப்படவும், விருந்தோம்பல் துறையில் பொதுத் திறந்த அடுக்கு வெளிகளில் உணவங்கள் இயங்கவும் பாராளுமன்ற ஆணைக்குழு தமது ஆதரவினை தெரிவித்துள்ளது.

பனிசறுக்கும் திடல்களிலும் பொதுத் திறந்தவெளி இடத்தினை உணவுச்சாலையாகப் பயன்படுத்த ஒப்புதல் கேட்டிருந்தபோது, சுவிஸ் அரசு அவ்வாறு செயற்படுவது நோய்த்தடுப்பு நடவடிக்கைகும், சட்டத்திற்கும் முரண் என்றும் மறுத்துவந்துள்ளது.

கிறவ்புந்தென், சுவிஸ், கிளாறுஸ், ஊறி அதுபோல் ஒப்வல்டென் மாநிலங்கள் தமது பனிசறுக்கும் திடல்களில் திறந்தவெளி அடுக்குத் தளங்களில் பொதுமக்கள் இருந்து உணவுண்ண வாய்ப்பினை ஏற்படுத்தி உள்ளன. கடந்த கிழமை இதனை சுட்டிக்காட்டிய வலிஸ் மாநில அதிபர் சுவிஸ் முழுவதும் சட்டம் முழுமையாக கடைப்பிடிக்கவேண்டும், அப்படி இல்லாதுபோனால் நாங்களும் உணவகங்களைத் திறக்க நேரிடும் என்றிருந்தார்.

அடுத்தகட்டம்

பெருந்தொற்று கண்காணிக்கப்பட்டு, நோய்த்தொற்றுச் சூழல் ஆய்வுசெய்யப்பட்டு, தொற்றின் தொகைக்கு அமைய அடுத்த நடவடிக்கை சுவிஸ் அரசால் 12. 03. 21 மாநிலங்களுடன் கலந்தாய்வுசெய்ய அனுப்பி வைக்கப்பட்டு, புதிய அறிவிப்பு 19. 03. 21 வெளிவரும். அது 22. 03. 21 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

தொகுப்பு - சிவமகிழி

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, Ratmalana

07 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, இராசாவின் தோட்டம்

28 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Scarborough, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், New York, Rochester, United States

19 Dec, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, கொழும்பு 6

24 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France, London, United Kingdom

31 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

28 Dec, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முரசுமோட்டை

26 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, டென்மார்க், Denmark

26 Dec, 2020
மரண அறிவித்தல்

யாழ்.பாஷையூர், Jaffna

24 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Meierskappel, Switzerland

25 Dec, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

ஜெயந்திநகர், பாரதிபுரம், பூநகரி, Wembley, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Markham, Canada

24 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
33ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம்

25 Dec, 1992
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஏழாலை தெற்கு

24 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US