நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 104 கோவிட் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 104 கோவிட் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கோவிட் தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஹட்டன் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும், வலப்பனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும், நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.
அத்துடன், அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேரும், பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவரும், டிக்கோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவரும் கோவிட் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கினிகத்தேனை, கந்தபளை, நோர்வூட், லிந்துலை மற்றும் ராகலை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கடந்த ஒக்டோபர் 24 ஆம் திகதி முதல் நேற்று வரை நுவரெலியா
மாவட்டத்தில் 1684 பேர் கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri