இந்தியாவில் அதிகரித்து வரும் கோவிட்: ஒரே நாளில் 4000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று!
இந்தியாவில் ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4,435 பேருக்கு கொரோனா கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21,179ல் இருந்து 23,091 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கோவிட் தடுப்பூசி
இந்தியாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,916 ஆக உள்ளதாகவும் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,79,712 ஆகப் பதிவாகியுள்ளது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் இதுவரை 220,66,16,373 டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
நேற்றைய தினம் (04.04.2023) ஒரே நாளில் 1,979 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் அதிக கூடும் இடங்களில் முககவசம் அணியவும், தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்திக் கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் கோவிட் பரவலைச் சமாளிக்கத் தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. குறிப்பாகத் தீவிர சிகிச்சைப் பிரிவு, மருத்துவ ஆக்சிஜன் விநியோகம் உள்ளிட்டவற்றைத் தயார் நிலையில் வைக்குமாறு மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
