கோவிட் நிமோனியா காரணமாகவே அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன
கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் என அடையாளம் காணப்படும் பல நபர்கள் நிமோனியா காரணமாகவே அதிகளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பாக வயதானவர்களுக்கு கோவிட் தொற்றினால், நிமோனியா அதிகரிக்கக் கூடும் எனவும் விசேட மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், போன்ற நோய்கள் உள்ளவர்கள் நிமோனியா ஏற்பட்டு ஆபத்தான நிலைமை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரும் புதிய கோவிட் திரிபுகளின் பிரதான நோயாக நிமோனியா அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது நிமோனியா நோய் அறிகுறிகள் காணப்படும் கோவிட் தொற்றுக்கு உள்ளான ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிமோனியாவுக்கு சிகிச்சை அளித்தாலும் அவர்கள் நோயாளிகள் உயிரிழக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம். எனினும் ஏற்கனவே பல நிமோனியா நோயாளிகளை காப்பாற்றமுடிந்துள்ளது.
இலங்கையில் பலவரது இறப்புக்குக் காரணம் கோவிட் நிமோனியா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு அதிகமான ஆபத்து காணப்பட்டதுடன் இதற்கு அமைய கோவிட் நோய் எதிர்ப்புச் சக்தி தடுப்பூசிகளை அவர்களுக்கு வழங்குவதில் முன்னுரிமை அளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இளம் வயது நபர்களும் கோவிட் நிமோனியா காரணமாக உயிரிழப்பது அதிகரித்துள்ளது எனவும் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
