அதிகரிக்கும் நாடாளுமன்ற கொரோனா கொத்தணி! நாட்டில் 6 லட்சம் தொற்றாளர்கள்!
இலங்கையின் நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றுடையவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பணியாளர்கள் மத்தியில் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
அண்மைக்காலத்தில் கொரோனாவினால் நாடாளுமன்றத்தின் நிதிப் பணிப்பாளர் பாதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் உணவு விநியோக சேவையில் உள்ள சுமார் பத்து பேர் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் தொற்றுக்கு உள்ளாகியிருந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன குணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கிடையில் நாடாளுமன்ற புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து 12 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இலங்கையில் இதுவரை காலத்தில் 15ஆயிரத்து 474 பேர் கொரோனாவினால் இறந்துள்ளனர்.
அத்துடன் 6 லட்சத்து 12ஆயிரத்து 322 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5 லட்சத்து 78ஆயிரத்து 849பேர் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர்.
இது இவ்வாறிருக்க, கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டியது பொதுமக்களின் பொறுப்பு என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.





குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. மொத்த ஷோவும் ஸ்கிரிப்ட் தானா? ராஜூ விளக்கம் Cineulagam
