வவுனியா மாவட்ட செயலகத்தில் மூவருக்கு கோவிட் தொற்று - எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை
வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் மூவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு சுகாதாரப் பிரிவினரால் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்திலும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் மூவர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கோவிட் தொற்று பரம்பலை தடுக்கும் வகையில் குறித்த தொற்றாளர்கள் கடமையாற்றிய போது அவர்களுடன் இணைந்து பணியாற்றியோர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் என எழுமாறாக 36 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.







