இங்கிலாந்தில், நிகழும் மரணங்களுக்கு மிக முக்கிய காரணம்!
ஜூலை மாதத்தில் இங்கிலாந்தில் நிகழும் மரணங்களுக்கு ஒன்பதாவது பெரிய காரணியாக கோவிட் தொற்று அமைந்துள்ளது. இது ஜூன் மாதத்தில் 26வது பொதுவான காரணியாக இருந்துள்ளது.
வேல்ஸில், மரணத்திற்கு 22வது முக்கிய காரணமாகவும் கோவிட் தொற்று இருந்துள்ளதுடன், முந்தைய மாதத்தில் தரவரிசைப்படுத்தலில் மிகவும் குறைவாகவும் பதிவாகியுள்ளது.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 முதல் 2019 ஜூலை மாதம் வரையிலான சராசரி அளவை விட உயிரிழக்கும் மக்களின் மொத்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இங்கிலாந்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை சராசரியை விட 7.6 வீதம் அதிகமாகவும், வேல்ஸில் 10.4 வீதம் அதிகமாகவும் பதிவாகியுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
தொற்று நோய் பரவத்தொடங்கிய மார்ச் 2020 முதல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆறு மாதங்களுக்கு (ஏப்ரல், மே, நவம்பர், டிசம்பர், 2021 ஜனவரி மற்றும் பெப்ரவரி ) கோவிட் தான் முதலிடத்தில் இருந்துள்ளது.
எவ்வாறாயினும், தொற்றுநோய் இல்லாதபோது, மரணத்திற்கு முக்கிய பொதுவான காரணியாக இதய நோய் மற்றும் டிமென்ஷியா இருந்துள்ளது.
எனினும், கோவிட் தொற்று முக்கிய காரணமாக இருந்த மாதங்களில், மேற்குறிப்பிட்டவை பொதுவாக நீண்ட தூர முன்னணி காரணியாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.