வவுனியாவில் மேலும் இரு ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவுக்குக் கற்பிக்கும் இரு ஆசிரியர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் ஏற்கனவே ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் இருவர் தொற்றுக்குள்ளான நிலையில் அப்பாடசாலையைச் சேர்ந்த மேலும் சில ஆசிரியர்களுக்கு இன்று அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதில், ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் இருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்கு உள்ளானவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காணப்படுதற்கும் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியாவில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர்
இதுவரை குறித்த பாடசாலையில் 4 ஆசிரியர்களுக்கு கோவிட் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
