மீண்டும் ஒரு முடக்கல் நிலை தவிர்க்க முடியாததாக மாறலாம்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைக்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்தால், மற்றொரு முடக்கலை நிராகரிக்க முடியாது என்று சுகாதார அமைச்சகத்தை கோடிட்டு கொழும்பின் ஊடகம் ஒன்று தொிவித்துள்ளது.
வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஏற்கனவே நெதா்லாந்து உட்பட்ட சில நாடுகள் முடக்கல்களை செயல்படுத்தும் நிலையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே மீண்டும் முடக்கலைத் தடுக்க பொதுமக்களும் அரசியல்வாதிகளும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் கோாிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை மற்றுமொரு முடக்கல் மேற்கொள்ளப்பட்டால், பொதுமக்களின் அன்றாடப் பணிகளில் பாாிய தாக்கம் ஏற்படக்கூடும் என்று சுகாதாரத்துறையினா் சுட்டிக்காட்டியுள்ளனா்.
அத்துடன் மீண்டும் கொரொனாத் தொற்று அதிகாிக்குமானால் பூஸ்டர் ஃபைசர் Pfizer தடுப்பூசி அளவும் அதிகாிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
