தம்புள்ளை வைத்தியசாலையில் கோவிட் தொற்றாளர் தப்பியோட்டம்
தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த கோவிட் தொற்றாளர் ஒருவர், தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பிச் சென்ற நபர் யாசகர் ஒருவர் என்றும் அவரை தேடிக் கண்டுபிடிக்க விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை நகரினுள் சஞ்சரித்து யாசகத்தில் ஈடுபடும் யாசகர் தம்பதியினர் நேற்று திடீர் சுகயீனம் காரணமாக தம்புள்ளை வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளனர்.
அதற்கமைய, அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டபோது, அவர்கள் கொரோனா தொற்றுடையோராக அடையாளம் காணப்பட்டனர்.
தம்புள்ளை வைத்தியசலையின் விசேட சிகிச்சை பிரிவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த ஆண் ஒருவரே இவ்வாறு தனது மனைவியை வைத்தியசாலையில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அதற்கமைய, தப்பிச்சென்ற தொற்றாளரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
