இலங்கையில் கோவிட் மரணங்கள் சடுதியாக உயர்வு!
இலங்கையில் மேலும் எட்டு கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 655 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, 2020 மார்ச் மாதம் கோவிட் பரவத் தொடங்கியது முதல் நாளாந்த கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை இன்று 1,000 ஐ தாண்டியது.
அதன்படி, இன்றைய தினம் 1,096 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 103,472 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 94,856 பேர் நோய் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.
தற்போதைய கோவிட் நிலைமை காரணமாக ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் மற்றும் கல்வி வகுப்புகளை மூடுவதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் செயற்பாடுகள் நாளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 7984 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.