இலங்கையில் திடீரென அதிகரிக்கும் கோவிட் மரணங்கள் - சுகாதார பிரிவு எச்சரிக்கை
இலங்கையில் கோவிட் நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாகவும், இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் அறிகுறியற்றவர்களாக இருப்பதால் தங்கள் வீடுகளில் உள்ள வயதானவர்களுக்கு வைரஸைக் கொண்டு செல்லும் போக்கு இருப்பதாகவும், நாள்பட்ட நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் வைரஸால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கோவிட் அறிகுறிகளை காட்டாமல், ஆரோக்கியமான நபராக சமூகத்தில் உள்ளவர்களில் சிலரை தெரிவு கோவிட் பரிசோதனை செய்தி தொற்றாளர்களை அடையாளம் காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூகத்தில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் உடனடியாக தடுப்பூசி செலுதத்திக் கொண்டால் மரணத்தை தடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களுக்கு மோதுமான சிகிச்சை வழங்குவதற்கு வைத்தியசாலைகளில் கட்டில்கள் உள்ளதெனவும் நோயாளிகளுக்கு அவசியமான ஒக்ஸிஜன் மற்றும் வேறு சிகிச்சைகள் வழங்கும் முறையை முகாமைத்துவத்துடன் முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
