இலங்கையில் கோவிட் மரணங்கள் தீவிரமடையும் ஆபத்து
கோவிட் 19 பரவலின் இரண்டாவது அலையை விஞ்ஞான ரீதியில் திட்டமிட்ட முறையில் மற்றும் போதுமான அரசியல் தலைமையின் கீழ் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு கட்டுப்படுத்தவில்லை என்றால் பாரிய ஆபத்தில் சிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் மரணங்களின் எண்ணிக்கையும் தீவிரமடையும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோராத் தொற்று காரணமாக நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அழுத்தம், அதிகரிக்கும் மரணங்களின் எண்ணிக்கை மற்றும் தொற்றாளர்களின் அளவின் மூலம் கணக்கிட முடியானதென சங்கத்தின் பிரதான செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுகாதார சேவை, பொது மக்களின் சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றிற்கு ஏற்படும் தாக்கம் சாதாரணம் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாடாக தினசரி அடிப்படையில் தொற்றுநோயைக் கையாள்வதற்கான செலவு மிகப்பெரியதாகும். மிகச் சிறிய பொருளாதாரம் மற்றும் கடனைச் சார்ந்திருக்கும் ஒரு நாடு என்ற வகையில் இந்த சூழ்நிலையை ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
