கோவிட் குறித்த புள்ளிவிபரங்கள் உண்மையில்லை: அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்
நாளாந்த கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கைக்கும் நாளாந்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கைக்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து புதிய திரிபுகள் உலகம் முழுவதிலும் பரவி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கோவிட்-19 நோய் தொற்று குறித்த புள்ளி விபரங்கள் யதார்தத்திற்கு புறம்பானது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கோவிட் தொற்று அதிகரிப்பு
நாளாந்த கோவிட் தொற்று உறுதியாளர்கள் எண்ணிக்கை மற்றும் கோவிட் மரணங்கள் தொடர்பிலான புள்ளி விபரங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளாந்த தொற்று உறுதியாளர் எண்ணிக்கை 100 முதல் 150 ஆக குறிப்பிடப்பட்ட போதிலும் மெய்யான எண்ணிக்கை இதனை விடவும் வெகுவாக அதிகமானதாகவே இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.
இதன்படி, அண்மைய நாட்களில் கோவிட் மரணங்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்லும் பாங்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam