கோவிட் சடலங்கள் தகன விவகாரம்! ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவையால் தீர்மானம் எடுக்க முடியாது என அறிவிப்பு
கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்போரின் சடலங்கள் தகனம் செய்யப்படும் விவகாரத்தில் அமைச்சரவை தலையீடு செய்யாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில இந்த விடயத்தை இன்றைய தினம் கொழும்பில் வைத்து தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவிற்கே உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என அண்மையில் பிரதமர் நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்து அவருடைய தனிப்பட்ட நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து ஜனாதிபதி, பிரதமர் அல்லது அமைச்சரவையினால் தீர்மானிக்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
