வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கும் கோவிட் தொற்று உறுதி
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கும் நேற்று முன்தினம் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலமாக மக்களுக்கான தனது கடமைகளை அலுவலகத்தில் மூடிய கண்ணாடி அறையிலிருந்து ஆற்றிவந்த நிலையிலும் அவருக்கு கோவிட் தொற்றியுள்ளமை பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கோவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் மக்களைத் தேவையற்று சந்திக்காமல் அதீத பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பிரதேச செயலர் பிரபாகரமூர்த்தி ஏற்படுத்தியிருந்தது.
அவரது நெருங்கிய சகாவான ஆளும் கட்சி அரசியல்வாதி ஒருவர் அடிக்கடி அவரது அலுவலகத்தில் சந்தித்து வந்துள்ள நிலையில் அவருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதேச செயலர் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் பலர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 18 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri