வவுனியாவில் அதிகரிக்கும் கோவிட் தொற்றுக்கள்
வவுனியா நகரப்பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் ஆரம்ப பிரிவு ஆசிரியருக்கும், அவரது கணவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் ஆரம்ப பிரிவுக்குக் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்குக் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவர் இன்று (15.11) மேற்கொண்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த ஆசிரியரின் குடும்பத்தினருக்கும் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஆசிரியரின் கணவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான இருவரும் சிகிச்சைக்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன்,
அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.