பளையில் உள்ள இலங்கை வங்கி கிளைக் காரியாலயத்தில் கடமை புரியும் 6 பேருக்கு கோவிட் தொற்று
பளையில் உள்ள இலங்கை வங்கி கிளைக் காரியாலயத்தில் கடமை புரியும் 6 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பளையில் உள்ள இலங்கை வங்கி கிளைக் காரியாலயத்தில் பயிற்சி பெற்று வந்த பளை செல்வபுரத்தை சேர்ந்த ஒருவர் தனது உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில், வங்கியில் விடுமுறை பெற்று வீட்டில் ஒய்வு எடுத்துள்ளார்.
பின்னர் உடல் நிலை மோசமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் கடந்த 19/07/2021 அன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் வங்கியில் கடமையில் இருந்தவர்கள் பலருக்கு உடல் நிலை சீரினமையால் அவர்களுக்கும் சுகாதார துறையினர் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதில் மேலும் ஐவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 19 மணி நேரம் முன்
ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்தது தன் குழந்தை என ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்... மகனுடன் வெளியிட்ட போட்டோ Cineulagam