வவுனியாவில் மேலும் 5 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 5 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு வெளியாகிய பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதில், சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், ஒமந்தை வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், தெற்கிலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், போகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 5 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்தவும் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன், வவுனியாவில் நேற்றைய தினம் யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா
வளாக மாணவர்கள் 31 பேர், வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் 5 பேர்
உட்பட 41 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 16 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
