சங்கானையில் கோவிட் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுப்பு
கோவிட் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை சங்கானை நகர்ப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை இன்றையதினம் சங்கானை வைத்திய அதிகாரி பணிமனையின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சுகாதார நடைமுறைகளை மீறிச் செயற்பட்ட நபர்கள், இனிமேல் சுகாதார நடைமுறைகளை மீறிச் செயற்பட்டால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதாக எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.
குறித்த விழிப்புணர்வு நடவடிக்கையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்,
வலிகாமம் மேற்கு பிரதேச சபை உப அலுவலகத்தின் பொறுப்பதிகாரி, வலிகாமம் மேற்கு
பிரதேச சபை உத்தியோகத்தர்கள், மானிப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்
மற்றும் சுழிபுரம், சங்கானை இராணுவத்தினர்
ஈடுபட்டுள்ளனர்.




