வவுனியாவில் ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் இருவருக்கும் பல மாணவர்களுக்கும் கோவிட் தொற்று உறுதி
வவுனியா மாவட்டத்தில் இரு ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கும், 8 மாணவர்களுக்கும் இதுவரை கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தமது உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து சுயமாக அவர்கள் முன்வந்து மேற்கொண்ட அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் போதே அவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்ட இரு ஆரம்ப பிரிவு ஆசிரியர்களும் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய ஆசிரியர்கள் என்பதுடன், தொற்றுக்குள்ளான மாணவர்கள் வெவ்வேறு பாடசாலைகளைச் சேர்ந்தவர்களாவர்.
எனவே, பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை
முழுமையாகப் பின்பற்றிச் செயற்படுமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri