கோவிட் - 19 தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பை உறுதி செய்யாது! வைத்தியர் ஹேமந்த ஹேரத்
கோவிட் - 19 தடுப்பூசி வைரஸிலிருந்து 100 சதவீதம் பாதுகாப்பை உறுதி செய்யாது என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போடுவது வைரஸிலிருந்து பாதுகாப்பை அதிகரிக்கும்.
எனினும் நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் வைரஸ் பாதிக்காது என்று அர்த்தமல்ல எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
“தடுப்பூசி போடுவது மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது தலைக்கவசம் அணிவது போன்றது.
தலைக்கவசம் அணிவது விபத்து ஏற்பட்டால் பயணிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கிறது, ஆனால் அந்த நபர் விபத்தை சந்திக்க மாட்டார் என்று அர்த்தமல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், தடுப்பூசி கூடுதல் பாதுகாப்பை மட்டுமே தருகிறது, ஆகையினால் பொதுமக்கள் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.