சீனாவில் பரவும் கோவிட் 19 திரிபு உலகத்திற்கு அச்சுறுத்தல்-உலக சுகாதார அமைப்பு
சீனாவில் பரவி வரும் ஒமிக்ரோன் பீ.எஃப்.7 என்ற கோவிட் 19 வைரஸின் புதிய உப திரிபு உலகத்திற்கு அச்சுறுத்தல் என உலக சுகாதார அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.
சுகாதார கட்டுப்பாடுகளை தளர்த்திய சீனா
சீனாவில் கோவிட் 19 தீவிரமாக பரவி வருவதாகவும் தினமும் சுமார் 50 ஆயிரம் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சீன சுகாதார துறையினர் நடைமுறைப்படுத்தி இருந்த சுகாதார கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததை அடுத்து அங்கு கோவிட் 19 வைரஸ் பரவல் மோசமாகியுள்ளது.
சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்பில் மக்கள் அரசுக்கு எதிர்ப்புகளை வெளியிட்டதன் காரணமாக சீன அரசு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
சீனாவில் தற்போது பரவி வரும் ஒமிக்ரோன் பீ.எஃப்.7 உப திரிபு இதற்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் மாத்தில் அமெரிக்காவில் மாத்திரமல்லாது ஐரோப்பிய நாடுகளிலும் அடையாளம் காணப்பட்டது.
சரியான முறையில் தடுப்பூசிகளை வழங்காத சீனா
எனினும் அந்நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான தடுப்பூசி வழங்கல் காரணமாக வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சீன மக்களுக்கு சரியான முறையில் தடுப்பூசிகள் வழங்கப்படாததே சீனாவில் கோவிட் 19 வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதற்கு காரணம் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகள் மாத்திரமே சீன மக்களுக்கு வழங்கப்பட்டன. மேற்குலக நாடுகளின் தடுப்பூசிகளை சீன ஏற்க மறுத்தது.
இந்த நிலையில், தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் Tedros Adhanom Ghebreyesus சீன அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.