கிண்ணியாவில் முடக்கப்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவு
கிண்ணியாவில் முடக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் படி கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகளான டாக்டர் எம்.எச்.எம்.ரிஸ்வி, டாக்டர் ஏ.எம்.எம்.அஜீத் ஆகியோர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ரஹ்மானியா நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்றாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.
இதேவேளை சனிக்கிழமை மாந்துறை, பெரிய கிண்ணியா பகுதிகளில் 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் நால்வர் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதேபோல குறிஞ்சாங்கேணி பகுதியில் 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மூவர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை முடக்கப்படாத பகுதிகளில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் பொது மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறு சுகாதார வைத்திய அதிகாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri