இலங்கையில் கோவிட் - 19 தொற்றால் உயிரிழந்துள்ள முதல் பொலிஸ் அதிகாரி
மொனராகலை பொலிஸ் பிரிவின் பிரதி பொலிஸ் அதிகாரியொருவர் கோவிட் - 19 தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
59 வயதான குறித்த நபருக்கு கடந்த 3ஆம் திகதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் மொனராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட் - 19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான குறித்த பொலிஸ் அதிகாரி ஓய்வு பெறும் நிலையில் அவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது இறுதி சடங்குகள் சுகாதார சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் என தெரியவருகிறது.
மேலும், இலங்கை பொலிஸில் முதலாவது கோவிட் - 19 மரணம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.



