இலங்கையில் கோவிட் - 19 மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 390 ஆக உயர்வடைந்துள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் மேலும் ஆறு கோவிட் மரணங்கள் பற்றிய தகவல்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
1. பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான பெண் ஒருவர் கடந்த 11ம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.கோவிட் நிமோனியா, உயர் குருதியழுத்தம் மற்றும் இருதய நோய் போன்றவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
2. ஹபராதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர் தேசிய தொற்று நோயியல் ஆய்வு கூடத்தில் நேற்று உயிரிழந்துள்ளார்.கோவிட் நிமோனியா, இருதய நோய் மற்றும் இரத்தம் விசமாகியமை ஆகிய நோய்களினால் இவர் உயிரிழந்துள்ளார்.
3. நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். மாரடைப்பு, உயர் குருதியழுத்தம், நுரையீரல் அழற்சி போன்ற நோய்களினால் இவர் உயிரிழந்துள்ளார்.
4. நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான பெண் ஒருவர் ஹோமகம வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா மற்றும் இருதய நோயினால் இவர் உயிரிழந்துள்ளார்.
5. கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர் கண்டி பெரியாஸ்பத்திரியில் கடந்த 9ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா மற்றும் இருதய நோயினால் இவர் உயிரிழந்துள்ளார்
6. நாரங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான ஆண் ஒருவர் ஹோமகம வைத்தியசாலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா, நீரிழிவு, உயர் குருதியழுத்தம், இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் என்பனவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam
