அன்புக்குரியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! - நாட்டு மக்களிடம் கோரிக்கை
அரசியல் கூட்டங்களை நடத்துவதால் நாடு முழுவதும் கோவிட் தொற்று வைரஸ் வேகமாக பரவி வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில்,
தற்போது உலகில் கோவிட் தொற்றின் அதிக ஆபத்து உள்ளது என்றும், ஒமிக்ரோன் மாறுபாடு நாடு மற்றும் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதாகவும் கூறினார்.
தற்போது நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில், நாட்டின் பொருளாதாரத்தின் பலவீனமான நிலை காரணமாக, வழமை போன்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தேவையற்ற அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தேவையற்ற அரசியல் கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் காரணமாக நாடு மீண்டும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எனவே, பொதுமக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பொறுப்பான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan