ஒரு வாரத்துக்குள் விசாரணைக்கு வரும் அமொிக்க நிறுவனத்துக்கு எதிரான வழக்கு
”யுகதனவி” மின்சார நிலையத்தின் பங்குகளை அமரிக்க நிறுவனத்துக்கு (The New Fortress Energy) விற்பனை செய்தமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்ய முழு அமர்வு நீதியரசர் குழுாம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள், இன்று உயர் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோதே பிரதம நீதியரசரின் தலைமையில், ஐந்து நீதியரசா்களைகொண்ட அமர்வு அமைக்கப்பட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இது தொடர்பிலான மனுக்களை , கர்தினால் மல்கம் ரஞ்சித், எல்லே குணவன்ச தேரர், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி, வசந்த சமரசிங்க மற்றும் பெங்கமுவ நாலக தேரர், கலாநிதி குணதாச அமரசேகர மற்றும் வசந்த பண்டார ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.
இந்தநிலையில் இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை எதிர்வரும் 29ஆம் திகதியன்று ஆரம்பமாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குறித்த அமொிக்க நிறுவனத்துடனான விற்பனை உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவைக்கு உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை.
அத்துடன் நாடாளுமன்றத்தின் அனுமதி இந்த உடன்படிக்கைக்கு பெற்றுக்கொள்ளப்படவில்லை என்று மனுதாரர்கள் தமது மனுக்களில் குற்றம் சுமத்தியுள்ளனர்.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri