மத்திய வங்கி மோசடி தொடர்பில் நீதிமன்ற பிடியாணை
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் அஜன் கார்டிய புஞ்சிஹேவா ஆகியோருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறிச் சம்பவம் தொடர்பில் இந்த பிடியாணை உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே வழங்கியுள்ளார்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதவான் உத்தரவு
மத்திய வங்கி பிணைப்பத்திர மோசடி மூலம் அரசாங்கத்திற்கு 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட 6 சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
355 கோடி ரூபா அளவிலான வரியை செலுத்தாமல் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் அர்ஜூன் அலோசியஸ், இந்த வழக்கில் சந்தேகநபராக உள்ளார்.
இந்நிலையில், அடுத்த விசாரணையின் போது அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |