அகதிகள் தொடர்பான பிரித்தானிய உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு : ரிஷி சுனக் ஆக்ரோஷம்
பிரித்தானியாவின் முக்கியமான அரசியல் கொள்கையாக திட்டமிடப்பட்ட ருவாண்டா விசாரணை திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்காமையால், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆக்ரோஷப்பட்டுள்ளார் என பிரித்தானியாவில் வசிக்கும் மூத்த சட்டத்தரணி அருண் கனநாதன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோரி நுழைபவர்களை ருவாண்டா நாட்டில் விசாரணை செய்ய பிரித்தானிய அரசு பல மில்லியன் பவுன்ஸ்களை செலவழித்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு
அத்தோடு இத்திட்டத்தை பிரித்தானிய அரசு வாக்குகளை வாரி குவிக்கும் முக்கியமானதொரு அரசியல் கொள்கையாக கருதுகிறது.
இத்திட்டதை உச்ச நீதிமன்றம் மறுத்தமையால் ரிஷி சுனக் ஏமாற்றமடைந்து, 'இந்நாட்டுக்குள் யார் வர வேண்டும் என தீர்மானிக்கும் உரிமை அரசுக்கே உள்ளது, குற்றவாளி கும்பல்களுக்கு இல்லை' என ஆக்ரோஷப்பட்டுள்ளார்.
எனினும், ரிஷி சுனக் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்போவதாக கூறியுள்ளது ஒரு இயலாத விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இதுவே உச்ச நீதிமன்றம். இதற்கு மேல் ஒரு உச்ச நீதிமன்றம் இந்நாட்டில் இல்லை எனவும் சட்டத்தரணி அருண் கனநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |