மட்டக்களப்பில் இரு மதுபானசாலைகளுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு(Photos)
மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள மதுபானம் அருந்தும் மதுபானசாலைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவைக் கையாண்ட இரண்டு மதுபானசாலைகளுக்கு 30 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாகச் செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று(15) உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
குறித்த பிரதேச வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள மமதுபானசாலைகளை இன்று வெட்டுக்காடு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர் முற்றுகையிட்டு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது மதுபானசாலைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவைக் கையாண்ட பிரபலியமான இரண்டு மதுபானசாலை ஊழியர் மற்றும் நிர்வாகத்துக்கு எதிராகப் புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபை சட்டம், உணவு சட்டத்தின் பிரகாரம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்தனர்.
இந்த இரு வழக்குகளும் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது ஒருவருக்கு 20 அயிரம்
ரூபாவும் மற்றவருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமாகச் செலுத்துமாறு நீதவான்
உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தார்.


