வவுனியாவில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியவர்களுக்கு நீதிமன்ற தண்டம்
வவுனியாவில் கோவிட் 19 தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இருவேறு வழக்கில் நீதவான் நீதிமன்றினால் தண்டம் அறவிடப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
பூவரசன்குளம் பொது சுகாதாரப்பரிசோதகர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றையதினம் நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்ட.
குறித்த குற்றச்சாட்டுகளில் தொடர்புபட்ட இரு வழக்குகளுக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் 20,000 ரூபா தண்டப்பணம் அறிவிடப்பட்டுள்ளதுடன் முகக்கவசம் இன்றி கோவிட் தொற்று நோய் சமூகத்தில் பரவும் விதத்தில் செயற்பட்ட நபர் ஒருவருக்கு ஐந்தாயிரம் ரூபாய் தண்டப்பணமும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தண்டப்பணத்தைத் செலுத்தும் வரையில் சிறையில் அடைப்பதற்கு நீதவான் உத்தரவு
பிறப்பித்துள்ளார் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
