இலங்கையில் அதானி நிறுவன ஒப்பந்தத்திற்கு எதிராக நீதிமன்ற உத்தரவு
அதானி நிறுவனத்தின் காற்றாலை மின்சார திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மன்னார், விடத்தல்தீவு பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தால் செய்துகொள்ளப்பட்ட காற்றாலை மின் நிலையத்தை உருவாக்குதல் தொடர்பான உடன்படிக்கையை வலுவற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.
குறித்த மனு, இலங்கை பசுமை அமைப்பின் தலைவர் சந்திம அபயவர்தன சமர்ப்பித்திருந்ததோடு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எம்.யூ.பி. கரலியத்தவினால் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இறுதியான தீர்மானம்
இந்நிலையில், இது தொடர்பான முக்கிய வழக்குகள் எதிர்வரும் மார்ச் மாதம் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளதாக அரச சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த திட்டம் தொடர்பில் இன்னும் இறுதியான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து, இது தொடர்பிலான மனுவை மே 23ஆம் திகதி பரிசீலிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |