யாழில் சட்டவிரோத செயலில் ஈடுப்பட்ட நால்வர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழ்.காங்கேசன்துறை பகுதியில் வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள் செய்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டினை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.
நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இதன்போது வாள் செய்து கொண்டிருந்த நால்வரை கைது செய்து, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸார் விசாரணையின் பின்னர் இருவரை விடுவித்து விட்டு இருவரை மாத்திரம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.
இதன்போது ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் மற்றொருவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan