24 மாடுகளுடன் மீட்கப்பட்ட கனரக வாகனம்: பிணையில் செல்ல நீதிமன்ற உத்தரவு
இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 24 மாடுகளுடன் மீட்கப்பட்ட கனரக வாகனம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் மீண்டும் குறித்த வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆந் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை கல்முனை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
வாகனம் பறிமுதல்
கடந்த வியாழக்கிழமை (12.03.2026) இரவு கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வைத்து குறித்த வாகனம் 24 மாடுகளுடன் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியில் இருந்து அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதிக்கு கொண்டு செல்லும் போது வீதிக்கடைமையில் நின்ற போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி குழுவினரால் கைப்பற்றப்பட்டிருந்தது.

இதன்போது 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், உரிய வழிதடை அனுமதி பெறப்பட்டிருந்த போதிலும் வாகனத்தில் காணப்பட்ட மாடுகள் நெருக்கி அடைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
மேலும், கைப்பற்றப்பட்ட வாகனத்தில் இடவசதிக்கு புறம்பாக அதிகளவான மாடுகள் ஏற்றப்பட்டதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் மிருகவதை சட்டத்தின் கீழ் கல்முனை தலைமையக பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு
இதனைத் தொடர்ந்து, நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை(13) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இரு தரப்பு வாதப்பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிமன்ற நீதிவான் 24 மாடுகளுடன் மீட்கப்பட்ட கனரக வாகனம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியதுடன் குறித்த வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மறு தவணைக்காக ஒத்தி வைத்துள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்ட மாடுகள் அடங்கிய வாகனம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைககப்பட்ட நிலையில், இரு மாடுகள் அவ்விடத்தில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan