நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ய உத்தரவு
புத்தளம் (Puttalam) மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை (Ali Sabri Raheem) கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கல்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான அயோனா விமலரத்ன, கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் குறித்த பகிரங்க பிடியாணையை பிறப்பித்துள்ளார்.
வழக்கு தாக்கல்
கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாம்பிட்டியில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான கட்டிடத்திற்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே அவரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த அரச சார்பற்ற நிறுவனம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கல்பிட்டி பொலிஸாரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |