யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டிக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி பரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, ஆகஸ்ட் 31ஆம் திகதி விசாரணைக்கு முந்தைய கலந்தாய்விற்காக அழைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று(16.07.2026) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
இதன்போது, அரச சட்டத்தரணி ஒஸ்வால்ட் பெரேரா, நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன்வைத்து, விசாரணைக்கு முந்தைய கலந்தாய்விற்கான திகதியை நிர்ணயிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்போதைய வழக்கில் இரண்டாவது பிரதிவாதியான டெய்சி பரஸ்ட் தொடர்பான அரசுத் தரப்பின் நிலைப்பாட்டையும், குற்றப்பத்திரிகையில் செய்யப்படும் திருத்தங்களையும் அப்போது அவர்களுக்குத் தெரிவிப்பதாக அரச சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை ஆகஸ்ட் 31ஆம் விசாரணைக்கு முந்தைய கலந்தாய்விற்காக விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாகச் சம்பாதித்த சுமார் 59 மில்லியன் ரூபாயை வங்கிக் கணக்குகளில் செலுத்தியதன் மூலம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டி, இந்த இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக தலைமை சட்டத்தரணி இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan