புராதன தொல் பொருட்களுடன் கைதானவர்களுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு(Photos)
முல்லைத்தீவு - தண்டுவான் பகுதியில் புராதன தொல் பொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது சந்தேக நபர்கள் அனைவரையும் மார்ச் எட்டாம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான தர்மபால செனவிரத்தின உட்பட 10 பேர் புராதன தொல் பொருட்களுடன் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தண்டுவான் பகுதியில் புராதன தொல்பொருள் தூண்கள் இரண்டினை சிலர் கடத்தி செல்வதாகப் பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது இவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது சந்தேக நபர்கள் அனைவரையும் மார்ச் எட்டாம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தர்மபால செனவிரத்தின கடந்த மாகாணசபையில் உறுப்பினராகவும் வவுனியா மாவட்ட
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளராகவும் செயற்பட்டு வந்தமை
குறிப்பிடத்தக்கது .


நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




