மட்டக்களப்பில் இருவர் கைது: விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
மட்டக்களப்பு - கல்லடி, திருச்செந்தூர் மற்றும் உப்போடை பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் கல்முனை மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்களினால் நேற்று (28.12.2025) கைது செய்யப்பட்டிருந்தனர்.
கிழக்கு மாகாண மதுவரித்திணைக்கள ஆணையாளர் எம்.பி.விஜயரட்னவின் ஆலோசனைக்கு அமைவாக கல்முனை மதுவரித்திணைக்கள பரிசோதகர் பி.காண்டிபன் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மீட்கப்பட்ட கசிப்பு
திருச்செந்தூர் பகுதியில் கைது செய்யப்பட்டவரிடமிருந்து 5 லீட்டர் கசிப்பும், உப்போடை பகுதியில் கைது செய்யப்பட்டவரிடமிருந்து 3 லீட்டர் கசிப்பும் கைற்றப்பட்டதாக மதுவரித் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

இவர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி தியாகேஸ்வரன் முன் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இருவரையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |