விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலக குழுக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரம் - நீதிமன்றத்தின் உத்தரவு
விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்களை பாதாள உலக குழுக்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கணேமுல்ல சஞ்ஜீவ என்ற சஞ்ஜீவ சமரரத்ன உட்பட 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எதிராக வழக்கு தொடர போதுமான சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் அவர்களை விடுதலை செய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விடுத்த கோரிக்கையை ஆராய்ந்த பின் நீதிமன்ற இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பாக மேலும் நான்கு பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri