கொழும்பில் பல இலட்சம் ரூபாய் மோசடி செய்த சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
எழுபது லட்சம் ரூபா மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மகிந்த கஹந்தகமகேவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
சந்தேகநபர் நேற்று (22.26.2023) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கொழும்பு- கொம்பனி வீதியில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான மெட்ரோ வீட்டுத் தொகுதியில் வீடொன்றை வழங்குவதாகக் கூறி முறைப்பாட்டாளரிடம் 70 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
தெரிந்தே செய்த தவறுகள்
இரண்டு தடவைகளில் காசோலைகள் மற்றும் பணத்தின் மூலம் சந்தேகநபருக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற பல குற்றச்சாட்டுகளின் கீழ் பல்வேறு நீதிமன்றங்களில் சந்தேகநபர் மீது முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர் தெரிந்தே இவ்வாறான தவறுகளை செய்வதாகவும் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
இந்நிலையில் மகிந்த கஹந்தகமகே மூன்று விளக்கமறியலின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் சந்தேகநபர் வெளிநாடு செல்வதைத் தடைசெய்து உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு பிணை நிபந்தனை விதித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
