வடக்கு-கிழக்கு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்(Video)
வடக்கு-கிழக்கில் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகள், மேன்முறையீட்டுக்காக கொழும்புக்கு வரும் போது அதற்கான மொழிபெயர்ப்பிற்கு மட்டும் இரண்டு வருட காலங்கள் செல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(05.07.2023) இடம்பெற்றுவரும் நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மொழிபெயர்ப்பு பிரச்சினை
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,வடக்கு-கிழக்கில் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் மேன்முறையீட்டுக்காக கொழும்புக்கு வரும் போது அதற்கான மொழிபெயர்ப்பிற்கு மட்டும் இரண்டு வருட காலங்கள் செல்கின்றது.
ஆகவே வடக்கு கிழக்கு நீதிமன்றங்களில் மேற்கொள்ளப்படும் வழக்கு விசாரணைகள் மேன்முறையீட்டுக்கு வரும் போது தமிழ் நீதியரசர்கள் அதனை ஆராய வேண்டும் அல்லது வடக்கு கிழக்குக்கு என பொதுவான மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றியில் எதாவது ஒன்றினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நீதிமன்ற விசாரணைகளில் தாமதம் ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan