பிரசன்ன ரணதுங்கவின் மேன்முறையீட்டுமனு நீதிமன்றால் ஒத்திவைப்பு
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மீதொட்டமுல்ல கப்பம் கோரப்பட்ட இந்த வழக்கானது, எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை விசாரணைக்காக பிற்போடப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு வர்த்தகர் ஒருவரை தொலைபேசியில் அச்சுறுத்தி 65 மில்லியன் ரூபாய்களை கோரிய குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றவாளி என மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிமன்றம் மீதான மனுதாக்கல்
அதன்படி, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு, அது ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.அத்துடன், அமைச்சருக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும், தமக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்து ரத்து செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அதிகார வரம்பை கோருவதாக அமைச்சர் ரணதுங்க தனது மேன்முறையீட்டின் மூலம் கோரியுள்ளார்.
இதற்கமையவே குறித்த மனு தொடர்பிலான விசாரணையை நீதிமன்றம் ஒத்தி வைத்து தீரப்பளித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |