அதிக விலையில் உரம் விற்பனை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
அதிக விலைக்கு உரம் விற்பனை செய்த வர்த்தக நிறுவனமொன்றின் உரிமையாளருக்கு அபராதமும், ஒரு மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் மாத்தறை நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது.
வேறுபட்ட அதிகபட்ச சில்லறை விலையில் உரப் பொதிகள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நுகர்வோர் விவகார அதிகார சபை குறித்த வர்த்தக நிலையத்தில் சோதனை நடத்தியது.
அங்கு, வேறுபட்ட கட்டுப்பாட்டு விலையில் 50 கிலோ யூரியா உரப் பொதிகள் 179 கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிறைத் தண்டனை
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கைப்பற்றப்பட்ட உர இருப்பு மற்றும் கடை உரிமையாளர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், 10 ஆயிரம் ரூபா அபராதமும், ஒரு மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

உரப் பொதிகளைப் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
கூடுதலாக, விலையை மாற்றி விற்பனைக்கு வைத்த குற்றச்சாட்டின் பேரில் சம்பந்தப்பட்ட உர நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இனி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்! நாட்டுக்கான எனது கடமையை முடித்துவிட்டேன் - முன்னாள் அமைச்சர் அலி சப்ரி நெகிழ்ச்சி
திருமண ஏற்பாடுகளுக்கு இடையில் நடேசனால் ஏற்பட்ட பிரச்சனை, செம கோபத்தில் சோழன்... அய்யனார் துணை சீரியல் Cineulagam