3.3 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள கட்டடம்! ஜெரோம் பெர்ணான்டோ குறித்து நீதிமன்றில் வெளியிடப்பட்ட விடயம்
பௌத்த மதம் உட்பட ஏனைய மதங்களுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளதாக கூறப்படும் போதகர் ஜெரோம் பெர்ணான்டோ ஆன்மீக கூட்டங்களை நடத்தும் “மிராக்கல் டோம்” என்ற கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு 3.3 பில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாகவும், அந்தளவு பாரிய தொகை அவருக்கு எவ்வாறு கிடைத்துள்ளது என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்த்தன உயர் நீதிமன்றத்தில் வைத்து நேற்று தெரிவித்துள்ளார்.
அதேபோன்று அவரது ஆன்மீக தலைவராகக் கருதப்படும் “ஊபர்ட் ஏஞ்சல்” என்பவர் சிம்பாப்வே நாட்டில் நிதி முறைகேடு மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி தங்க விற்பனை தொடர்பிலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளாரென்பதையும் அவர் நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அவரது செயற்பாடுகள் 14 நாடுகளில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
