பிரபல இசைக்குழு தொடர்பில் நீதிமன்றம் விதித்துள்ள தடை
பிரபல இசைக் குழு ஒன்றின் உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக நீதிமன்றம் விதித்துள்ள தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஜய ஸ்ரீ இசைக்குழுவின் "மொட் கொவியா" "மற்றும் சுந்தரியே" ஆகிய இசை ஆல்பங்களில் அடங்கியுள்ள 20 பாடல்களை பாடுதல், பிரசாரம் செய்தல், இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்தல் ஆகியவற்றுக்கு தடைவிதித்து, இசைக் குழுவின் இரண்டு உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றம் விதித்திருந்த தடையை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடித்து, கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. மரிக்கார் (A.Markkar) முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்படடது. அப்போது தடை யுத்தரவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இசைக்குழுவின் உறுப்பினரான அருண லியனகே (Aruna Lianage) இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். தானும் இந்த வழக்கின் பிரதிவாதிகள் இருவரும் இணைந்து ஜய ஸ்ரீ இசைக்குழுவை உருவாக்கியதாக மனுதார் கூறியுள்ளார்.
பிரதிவாதிகள் இசைக்குழுவில் இருந்து விலகி விட்டதாகவும் அவர்கள் தனது அனுமதியின்றி இசைக்குழு தயாரித்த "மொட் கொவியா", "சுந்தரியே" ஆகிய இசை ஆல்பங்களில் உள்ள பாடல்களை பாடுவதாகவும் இது புலமைச் சொத்து சட்டத்திற்கு முரணானது எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
