மக்களின் அடிப்படையை உரிமையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்-எஸ்.எம்.மரிக்கார்
நாட்டு மக்களின் பேச்சுரிமை, கருத்துரிமை,ஒன்றுக்கூடும் உரிமை ஆகியவற்றை பாதுகாத்துக்கொடுத்தமை தொடர்பில் உயர் நீதிமன்றத்திற்கு தலைவணங்கி மரியாதை செலுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரானவர்களை அடக்க கொண்டு வரப்பட்ட சட்டமூலம்

புனர்வாழ்வு மறுசீரமைப்பு அதிகார சபை சட்டமூலம் வரைவு சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு இன்று நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டதுடன் உயர் நீதிமன்றம் மக்களின் அடிப்படை உரிமையை உறுதி செய்துள்ளது.
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்காக இந்த புனர்வாழ்வு சட்டம் இதுவரை நடைமுறையில் இருந்தது.
அமைதியான ஆர்ப்பாட்டகாரர்கள், உரிமைகளுக்காக போராடுபவர்கள், கருத்து சுதந்திரத்திற்காக ஒன்றுக்கூடுவோரை பலவந்தமாக அழைத்துச் சென்று புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் நோக்கில் மூன்று வாரங்களுக்கு முன்னர் அரசாங்கம் மீண்டும் இந்த சட்டத்தை கொண்டு வந்தது.
இதனடிப்படையில் அரசாங்கத்திற்கு எதிராக நிலைப்பாடுகளை கொண்டுள்ளவர்களை அடக்கும் திட்டம் இதற்குள் இருந்தது. இதனால், அதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றதாகவும் எஸ்.எம்.மரிக்கார் மேலும் தெரிவித்துள்ளார்.