இலங்கைக்கு பெரும் தொகை தங்கம் கொண்டு வந்த தம்பதியினர் கைது
சுமார் ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த தம்பதியரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் குழுவினர் இன்று (9) மாலை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய திருமணமான தம்பதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் இன்று (9) பிற்பகல் 02.30 மணியளவில் ஓமானின் மஸ்கட்டில் இருந்து ஓமன் எயார் நிறுவனத்தின் WY-373 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் அணிந்திருந்த ஆடைகளுக்கு இடையில் இந்த நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றும் சுங்க அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri