கடல் வழியாக இலங்கைக்கு தப்ப முயன்ற தம்பதி உட்பட 8 பேர் கைது
தனுஷ்கோடி (Dhanushkodi) கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு (Sri Lanka) தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தம்பதி இருவர் உட்பட 8 பேர் இராமேஸ்வரம் - தங்கச்சிமடம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா (Vavuniya) பகுதியைச் சேர்ந்த குறித்த தம்பதியர், கடந்த 2017ஆம் ஆண்டு விமானம் மூலம் சென்னை (Chennai) சென்றுள்ளனர்.
சென்னையில் தங்கி இருந்த நிலையில் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல முடியாததால் சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த இருவரை தொடர்பு கொண்டு தம்மை தனுஷ்கோடி கடல் வழியாக படகில் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், தம்பதியரிடம் பணத்தை பெற்றுக் கொண்ட இருவரும் வேதாளை பகுதியை சேர்ந்த மற்றுமொருவரை தொடர்பு கொண்டு இலங்கைக்கு இருவரையும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
அதன்பின்னர், குறித்த இருவரும் தம்பதியரை ராமேஸ்வரத்திற்கு அழைத்து வந்து தங்கச்சிமடம் அடுத்துள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்துள்ளனர்.
இதனையடுத்து, இன்று அதிகாலை தங்கச்சிமடம் மாந்தோப்பு கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் வழியாக வவுனியாவிற்கு தப்பி செல்ல முயன்ற போது, தகவலறிந்த தங்கச்சிமடம் பொலிஸார், வவுனியாவைச் சேர்ந்த ஆர். ராஜேஸ்வரன் (52) மற்றும் அவரது மனைவி சாந்தி (47) ஆகியோர் உட்பட சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், விசாரணைகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட 8 பேரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக தங்கச்சிமடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
