நாட்டை திறப்பது தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்
எதிர்வரும் வாரம் சில கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை திறக்க முடியும் என கொவிட் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையத்தின் பிரதானி இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்து்ளளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட இராணுவ தளபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை இது தொடர்பான இறுதி முடியு வழங்கப்படும் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
நாட்டை திறப்பதென்றால் அதற்கான வழிக்காட்டல் பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி, கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கமைய பரிந்துரைகளுக்கமைய நாட்டை நடத்தி செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் வாரம் நாட்டை திறப்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது. சுகாதார வழிமுறைகளின் கீழ் சில கட்டுப்பாடுகளுடன் நாடு திறப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
எதிரிகள் மரணத்தை ருசிப்பார்கள்... ட்ரம்பிற்கு ஈராக்கின் துணை இராணுவப் படை பகிரங்க எச்சரிக்கை News Lankasri